கூடலூர், ஜன. 26: கூடலூரில் இருந்து நாடுகாணி கீழ்நாடுகாணி வழியாக கேரள மாநிலம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் தமிழ்நாடு எல்லை பகுதியில் நேற்று முன்தினம் இரவு வந்த சரக்கு லாரி ஒன்று பழுதாகி நின்றதால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், கனரக வாகனங்கள், பேருந்து உள்ளிட்டவை இயக்க முடியாமல் சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டன. கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் மட்டுமே அந்த சாலை வழியாக சென்று வந்தன.
இதனையடுத்து நேற்று காலை லாரியில் இருந்த சரக்குகளை இறக்கி பின்னர் லாரியில் உள்ள பழுது நீக்கப்பட்டு லாரி அங்கிருந்து சென்ற பின்னரே மற்ற வாகனங்கள் இயக்கப்பட்டன. லாரி பழுதாகி நின்றதால் நேற்று காலை வரை பல மணி நேரம் இந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கீழ்நாடு காணி வழியாக செல்லும் இந்த மாநில நெடுஞ்சாலையில் தமிழக எல்லை பகுதி வரை உள்ள சுமார் 6 கிலோ மீட்டர் தூர சாலை மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து உள்ளதாகவும், இதனால் இந்த சாலையில் வரும் சரக்கு லாரிகள் அடிக்கடி பழுதாகி நின்று விடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த சாலையில் சீரமைப்பு பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் தெரிவித்துள்ளனர்.
The post கீழ்நாடுகாணி சாலையில் சரக்கு லாரி பழுதானதால் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.