கீழத்தூவல் அரசு மருத்துவமனையில் சுகாதார பொங்கல் விழா

3 weeks ago 7

 

சாயல்குடி,ஜன.12: முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சுகாதார பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.  முதுகுளத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் திவான் முகைதீன் தலைமையில், மருத்துவ அலுவலர் பவித்ரவர்ஷினி முன்னிலையில் அனைத்து பணியாளர்களும் புத்தாடைகள் அணிந்து மருத்துவமனை வளாகத்தில் வண்ணக் கோலமிட்டு, கரும்பு தோரணங்கள் கட்டி புதுப்பானையில் சர்க்கரை பொங்கல் வைத்து வழிபட்டனர்.

பின்னர் அதிர்ஷ்ட வட்டம், பந்து உருட்டுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக மஞ்சள் துணிப்பை வழங்கப்பட்டது. இந்த சுகாதார பொங்கல் விழாவில், அலுவலக கண்காணிப்பாளர் ஜெயலட்சுமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுப்பிரமணியன் உள்ளிட்ட சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், ஆய்வக நுட்பனர்கள் மருத்துவ பணியாளர்கள் டெங்கு கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post கீழத்தூவல் அரசு மருத்துவமனையில் சுகாதார பொங்கல் விழா appeared first on Dinakaran.

Read Entire Article