கீழடி 1,2-ம் கட்ட அகழாய்வு அறிக்கை வெளியிட தாமதம் ஏன்?.. ஒன்றிய அரசு மழுப்பல் பதில்

4 weeks ago 6

சென்னை: கீழடி 1,2-ம் கட்ட அகழாய்வு அறிக்கை வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கீழடியில் நடந்த முதல், இரண்டாம் கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிடுவதில் ஏன் தாமதம் என்று மக்களவையில் திமுக எம்.பி. ராணிஸ்ரீகுமார் கேள்வி எழுப்பினார் இதற்கு பதிலளித்து பேசிய ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்; 2015,2016-ல் நடைபெற்ற கீழடி முதல், 2-ம் கட்ட அகழாய்வு – அறிக்கை கடந்த ஆண்டே ஒன்றிய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையை வெளியிடுவதற்கு முன் நிபுணர்களை கொண்டு முழுமையாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.

முழுமையான ஆய்வுக்கு பிறகே அரசு விதிகளின்படி அகழாய்வு அறிக்கையை வெளியிட முடியும். கீழடியில் 1,2,3-ம் கட்ட அகழாய்வு பணிகளை ஒன்றிய அரசின் தொல்லியல்துறை மேற்கொண்டது. 4 முதல் 9 கட்ட அகழாய்வுகளை தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை நடத்தியது. தமிழ்நாடு அரசு நடத்திய அகழாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுவிட்ட நிலையில் முதல் மற்றும் 2-ம் கட்ட முடிவுகள் வெளியாகவில்லை. முதல் மற்றும் 2-ம் கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையிலும் வழக்கு தொடரப்பட்டது.

உயர்நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரியில் விசாரணைக்கு வந்தபோது 9 மாதத்தில் அறிக்கை வெளியிடப்படும் என ஒன்றிய அரசு கூறியிருந்தது. 9 மாதங்கள் கடந்துவிட்டபோதும் இதுவரை ஒன்றிய அரசு கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிடவில்லை. நேற்று ஒன்றிய அமைச்சரின் பதிலும் அறிக்கை வெளியிடப்படும் என்று உறுதி அளிக்காததால் அறிக்கை வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

The post கீழடி 1,2-ம் கட்ட அகழாய்வு அறிக்கை வெளியிட தாமதம் ஏன்?.. ஒன்றிய அரசு மழுப்பல் பதில் appeared first on Dinakaran.

Read Entire Article