வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டத்தில் ரூ.215 கோடியே 80 லட்சம் ஒதுக்கீடு

4 hours ago 2

வேளாண் அறிக்கையில் கூறியிருப்பதாவது: மணப்பாற மாடுகட்டி மாயவரம் ஏறு பூட்டிவயக்காட்ட உழுது போடு சின்னக் கண்ணு”என்று இருந்த நிலைமாறி உயிர்காக்கும் உழவுத்தொழிலிலும், இயந்திரங்களின் தேவை அதிகரித்துவிட்டது.வேளாண் பணிகள் தொழிலாளர்கள் பற்றாக்குறையினால் நலிவுறாமல் குறித்த காலத்தில், செவ்வனே நடைபெற்று குறைந்த செலவில், அதிக மகசூல் பெறுவதில் வேளாண் இயந்திரமயமாாக்குதல் பெரும் பங்காற்றுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு வேளாண் இயந்திரங்கள், கருவிகள், மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள், சூரியக்கூடார உலர்த்திகள் போன்றவை உழவர்கள் பயனடையும் வகையில் மானியத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.

வேளாண் இயந்திரமயமாாக்கும் திட்டத்தின் கீழ் சிறு, குறு, ஆதி திராாவிடர், பழங்குடியினர் மற்றும் பெண் உழவர்களுக்கு வேளாண் இயந்திரங்கள், கருவிகளின் விலையில் 50 சதவீதம், இதர உழவர்களுக்கு 40 சதவீதம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.சிறிய வகையிலாான நெல் நாற்றுநடும் இயந்திரத்தின் அதிகபட்ச மானியமாானது, ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு இலட்சத்து 70 ஆயிரம் ரூபாயாகவும், விசைக் களையெடுக்கும் கருவியின் அதிகபட்சமாானியமானது, 63 ஆயிரம் ரூபாயிலிருந்து 85 ஆயிரம் ரூபாயாகவும், உயர்த்தி வழங்கப்படும்.

மேலும், சிறு, குறு உழவர்கள், சிறிய நிலப்பரப்பில் வேளாாண் பணிகளை தாங்களே மேற்கொள்ள உதவிடும் வகையில், உழவர்களுக்கு 7,900 பவர்டில்லர்கள், 6,000 விசை களையெடுப்பான்கள் மானியத்தில் வழங்கப்படும்.இத்திட்டத்தில், வருகின்ற 2025-26 ஆம் ஆண்டில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படவுள்ள 2,338 கிராமங்களில் 5,000 வேளாாண் இயந்திரங்களும், கருவிகளும் முன்னுரிமைஅடிப்படையில் வழங்கப்படும்.

நெல் நாற்று நடவு செய்யும் இயந்திரம், விசைக் களையெடுப்பான் ஆகியவற்றினை வாாங்கிட, சிறு, குறு உழவர்களுக்கு நடைமுறையிலுள்ள 50 சதவீத மானியத்துடன், கூடுதலாக 10 சதவீதம் சேர்த்து, 60 சதவீதம் மானியம் வழங்கப்படும். இதற்கென, மாநில நிதியிலிருந்து ரூபாய் ஐந்து கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டத்தில், 2025-26 ஆம் ஆண்டில் 17 ஆயிரம் உழவர்கள் பயனடையும் வகையில் 215 கோடியே 80 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

The post வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டத்தில் ரூ.215 கோடியே 80 லட்சம் ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Read Entire Article