புதுக்கோட்டை, மே 21: புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் பொக்கன் குளத்தில் கீரனூர் தீயணைப்பு துறை சார்பில் தென்மேற்கு பருவ மழையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஒத்திகை நடந்தது. கேரளா உள்ளிட் மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை துவங்கியது. படிப்படியாக தமிழகத்திலும் துவங்க உள்ள நிலையில், முதலமைச்சர் மாவட்ட கலெக்டர், தீயணைப்பு துறை, காவல்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, மீட்பு பணிகளுக்கான ஏற்பாடுகளுக்கான அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதையடுத்து, தமிழகம் முழுவதும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், வருவாய்த்துறையினர் முன்னேற்பாடு பணிகளை துவங்கியுள்ளனர். அதில், தீயணைப்புத்துறை சார்பில் தனியார், அரசு நநிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மீட்பு பணிகள் தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
அதன்படி, கீரனூர் தீயணைப்பு நிலையம் சார்பில் பொக்கன் குளத்தில் மழை காலத்தில் வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே எவ்வாறு காப்பாற்றுவது நீர் நிலைகளில் சிக்கியவர்களை எவ்வாறு காப்பாற்றுவது கட்டிட ஈடுபாடுகளில் சிக்குபவர்களை எவ்வாறு மீட்பது போன்ற உத்திகளை தீயணைப்பு துறையினர் தத்துவமாக செய்து காட்டினர். மேலும், மழைக்காலங்களில் விழுந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்துவது அதன் மூலம் போக்குவரத்தை சரி செய்யும் பணியை எவ்வாறு செய்வது போன்ற பணிகளையும் தீயணைப்பு துறையினர் செய்து காட்டினர். மேலும், மாடி போன்ற பகுதிகளில் சிக்கிக் கொள்ளும் பொது மக்களை எவ்வாறு காப்பாற்றுவது, மரங்களிலிருந்து மற்றொரு மரத்திற்கு கயிறு கட்டி செல்வது, விபத்து காலங்களில் பொது மக்களை காப்பது உள்ளிட்டவைகளையும் செய்து காட்டினர்.
போது அப்பகுதி மக்கள் ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டதாக அங்கு வந்து பார்த்தனர்.இதன் பின்பு இது வெள்ளை கால தடுப்பு நடவடிக்கையான ஒத்திகை பயிற்சி என்று தீயணைப்புதுறையினரும் அதிகாரிகளும் பொதுமக்களிடம் தெரிவித்தனர்.
The post கீரனூர் தீயணைப்புத்துறை சார்பில் பொக்கன்குளத்தில் மீட்பு பணிகள் குறித்து ஒத்திகை appeared first on Dinakaran.