கிவி பழத்தின் நன்மைகள்!

2 months ago 12

நன்றி குங்குமம் டாக்டர்

கிவி பழம் சிட்ரஸ் வகை பழங்களுள் ஒன்று. இது இனிப்பு மற்றும் புளிப்புச் சுவை கொண்டது. இதில் முக்கிய கனிமச்சத்துக்களான போரான், குளோரைடு, காப்பர், குரோமியம், ஃப்ளூரைடு, அயோடின், இரும்புச்சத்து, மக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், செலினியம், சோடியம், ஜிங்க் போன்றவை நிறைந்துள்ளது.

சுமார் 69 கிராம் எடை கொண்ட ஒரு கிவி பழத்தில் 23.46 மி.கி கால்சியம் இருக்கிறது. இது எலும்புகளின் வளர்ச்சிக்கும், பற்களின் ஆரோக்கியத்திற்கும் ஏற்றதாகும். செரிமானம் மற்றும் இதயத்தின் செயல்பாட்டிற்கு அவசியமான செரடோனின் கிவியில் நிறைந்துள்ளது. இந்த செரடோனின் இரவில் நல்ல தூக்கத்திற்கு உதவுவதோடு, புத்துணர்ச்சியுடனும் வைக்கிறது.

ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள், மோனோஅன் சாச்சுரேட்டட் கொழுப்புகள், பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் மற்றும் சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் போன்றவை உள்ளது. இவை நமது உடலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்று செயல்படும் கிவி பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், இது ப்ரீ-ராடிக்கல்களால் செல்கள் பாதிக்கப்படுவதைத் தடுத்து, புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும். போதிய அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளை எடுக்கும்போது, குடல் புற்றுநோய், இதயநோய், ஆஸ்டியோஆர்த்ரிடிஸ், பக்கவாதம் போன்றவற்றைத் தடுக்கும். இதில் உள்ள ப்ளேவோனாய்டு சருமத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்கும்.

கிவி பழத்தில் டயட்டரி நார்ச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, இதயநோயின் அபாயத்தைத் தடுக்கும் மற்றும் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும். கிவி பழத்தை வாரத்திற்கு 1-2 சாப்பிடுவதன் மூலம், சுவாச நோய்களுக்கு எதிரான பாதுகாப்பு கிடைக்கும் என தெரிய வந்துள்ளது. கிவி பழத்தை ஒருவர் தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால், மூச்சு இறைப்பு பிரச்சனை சரியாகும். ஆஸ்துமா நோயாளிகளுக்கு கிவி பழம் மிகவும் நல்லது.

கிவி பழத்தில் வைட்டமின் ஏ, சி, ஈ போன்ற, கண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் உள்ளது. கிவி பழம் மாகுலர் திசு சிதைவைத் தடுத்து, முதுமைக் காலத்தில் பார்வை இழப்பு ஏற்படும் அபாயத்தைத் தடுக்கும். கிவிவியில் ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ளது. போலிக் அமிலம் கருவின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான சத்தாகும்.

தொகுப்பு: தவநிதி

The post கிவி பழத்தின் நன்மைகள்! appeared first on Dinakaran.

Read Entire Article