கிளாம்பாக்கத்தில் இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்திய 2பேரை கைது செய்தது தனிப்படை போலீஸ்

2 hours ago 1

சென்னை: மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 18 வயதுடைய பெண் சேலத்தில் தங்கி பணியாற்றி வருகிறார்.
சென்னை மாதவரத்தில் இவரது உறவினர்கள் தங்கியுள்ளனர். அவர்களை காண்பதற்காக நேற்று முன்தினம்(பிப்ரவரி 3) காலை சேலத்தில் இருந்து சென்னை கிளம்பி வந்துள்ளார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அன்று இரவு இறங்கிய அப்பெண், வெளியில் உள்ள மாநகர பேருந்து நிலையத்துக்கு வந்து மாதவரம் செல்வதற்காக பேருந்துக்காக காத்திருந்தார்.

இரவு நேரத்தில் தனியாக நின்றுக்கொண்டிருந்த பெண் அருகே வந்து நின்ற ஆட்டோ ஓட்டுநர் வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றிச் சென்றுள்ளார். இந்நிலையில் வழியில் ஆட்டோவில் ஏரிய அவரது நண்பர்கள் கத்திய காட்டி மிரட்டி அவரிடன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பெண் உதவி கேட்டு கத்தி கூச்சலிட்டதால், அருகில் இருந்தவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தனர்.

இதனை அடுத்து போலீசார் பேட்ரோல் வாகனத்தில் அந்த ஆட்டோவை துரத்திச் சென்றனர். போலீசார் துரத்துவதை அறிந்த ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர்கள் இளம் பெண்ணை கீழே இறக்கிவிட்டு, அவரது உடைமைகளை தூக்கி வீசிவிட்டு சென்றுள்ளனர்.

இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை அளித்தவர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் கடத்தல் விவகாரம் தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் முத்தமிழ்ச்செல்வன் மற்றும் தயாளன் ஆகியோரை கூடுவாஞ்சேரி தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தயாளர் சரித்திர பதிவேடு குற்றவாளி என விசாரணையில் தெரியவந்துள்ளது.

The post கிளாம்பாக்கத்தில் இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்திய 2பேரை கைது செய்தது தனிப்படை போலீஸ் appeared first on Dinakaran.

Read Entire Article