கான்பெர்ரா: ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஸ்டோய்னிஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ஆஸ்திரேலிய ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. எனவே, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வரவிருக்கும் போட்டிகளுக்கு மாற்று ஆல்ரவுண்டரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
சாம்பியன்ஸ் டிராபிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் சேர்க்கப்பட்டார். இருப்பினும் ஸ்டோய்னிஸ் இப்போது தனது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருவதாக அறிவித்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவேன் என்று கூறியுள்ளார். வரும் நாட்களில் ஐபிஎல் போன்று உலகம் முழுவதும் நடைபெறும் தொடர்களில் அதிக கவனம் செலுத்தவும் அவர் முடிவு செய்துள்ளார். “ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து விலகி எனது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தில் முழுமையாக கவனம் செலுத்த இதுவே சரியான நேரம் என்று நான் நம்புகிறேன்” என மார்கஸ் ஸ்டோய்னிஸ் தெரிவித்துள்ளார்.
மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆஸ்திரேலியாவுக்காக 71 ஒருநாள் போட்டிகளில் விளையாடியஸ்டோய்னிஸ் 64 இன்னிங்ஸ்களில் 1 சதம் மற்றும் 6 அரைசதங்களுடன் மொத்தம் 1495 ரன்களைக் குவித்துள்ளார். மேலும் 48 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
The post சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஓய்வு appeared first on Dinakaran.