கிருஷ்ணராயபுரம், மே 22: கிருஷ்ணராயபுரம் பகுதியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் 11ம் வகுப்பு சேர்க்கைக்கு பெருமளவு அரசு பள்ளிகளை நாடி ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 16ம் தேதி வெளியானது. அதனைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் பிளஸ்1 வகுப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பித்து வருகின்றனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 11ம் வகுப்பு பயிலுவதற்கு மாணவ மாணவிகள் சேர்க்கை விண்ணப்பங்களை பள்ளி தலைமை ஆசிரியர் ரெத்தினம் மற்றும் ஆசிரியர்களிடம் கொடுத்து ஆர்வத்துடன் சேர்ந்து வருகின்றனர்.
அதேபோல் கிருஷ்ணராயபுரம் பகுதியில் உள்ள பழைய ஜெயங்கொண்டம், லாலாபேட்டை, பஞ்சப்பட்டி,வேங்காம்பட்டி, சின்ன சேங்கல் ஆகிய ஊர்களில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அவற்றில் மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர்களுடன் நேரில் சென்று தங்களுக்கு பிடித்த பிரிவுகளின் விண்ணப்பித்து சேர்ந்து வருகின்றனர்.
The post கிருஷ்ணராயபுரம் பகுதியில் 11ம் வகுப்பில் அரசு பள்ளிகளில் சேர மாணவர்கள் ஆர்வம் appeared first on Dinakaran.