கிருஷ்ணகிரி, ஏப்.11: கிருஷ்ணகிரியில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு, வெயிலின் தாக்கம் நிலவி வருகிறது. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்றனர். மேலும் கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய சாலையில் வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனிடையே, வேப்பனஹள்ளியில் மதியம் சாரல் மழை பெய்தது. வெயில் சுட்டெரித்த நிலையில் பல்வேறு பகுதிகளில் பழங்கள் மற்றும் குளிர்பானங்கள் விற்பனை அதிகரித்தது. கலெக்டர் அலுவலக சாலை, சேலம் சாலை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தர்பூசணி, முலாம் பழம், வெள்ளரிகாய், இளநீர், கரும்பு சாறு, எலுமிச்சை, நுங்கு மற்றும் குளிர்பானங்கள் அதிகளவில் விற்பனையானது. வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க கூடும் என்பதால், மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கிருஷ்ணகிரியில் வெயில் தாக்கம் அதிகரிப்பு appeared first on Dinakaran.