பஹல்காமில் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும்: பிரதமர் மோடி

9 hours ago 2

டெல்லி: பஹல்காமில் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று அகில இந்திய வானொலி மூலம் மனதின் குரல் நிகழ்ச்சியில் மக்களோடு கலந்துரையாடி வருகிறார். அந்த வகையில், இன்றைய கலந்துரையாடலின்போது பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் பற்றி பேசினார். இதுகுறித்து பிரதமர் மோடி பேசியதாவது;

“ஜம்மு காஷ்மீரில் நீண்ட நாட்களுக்கு பிறகு அமைதி திரும்பியது. மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர். ஆனால் ஜம்மு காஷ்மீர் அமைதியாக இருப்பதை பயங்கரவாதிகள் விரும்பவில்லை. சகஜ நிலைக்கு காஷ்மீர் திரும்புவதை விரும்பாத பயங்கரவாதிகள் பஹல்காமில் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த இந்த பயங்கரவாத தாக்குதல் காஷ்மீர் அமைதியாக இருக்க விரும்பவில்லை என்பதையும், காஷ்மீரை அழிக்க நினைப்பதையும் காட்டுகிறது.

இந்த பயங்கரவாத தாக்குதல் என் மனதை உடைத்துவிட்டது. இந்த தாக்குதலில் உயிரிழந்த என் சொந்தங்களுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதல் கோழைத்தனமானது. இது அவரது கோழைத்தனத்தை தான் காட்டுகிறது. எனினும் இதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும். பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தில் உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. 140 கோடி மக்களும் பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்க வில்லை” இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

The post பஹல்காமில் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும்: பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Read Entire Article