கிருஷ்ணகிரியில் தொடர் மழையால் பெரிய பாறை உருண்டு விழுந்தது: சையத் பாஷா மலையின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய கோரிக்கை

17 hours ago 1

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பெய்த தொடர் மழை எதிரொலியாக சையத் பாஷா மலையில் இருந்து மிகப்பெரிய பாறை உருண்டு விழுந்ததில் வீட்டின் சசுற்றுசுவர் இடிந்து உள்ளது. ஃபெஞ்சல் புயல் தாக்கத்தால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி, பர்கூர் போன்ற பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்து வெள்ளக்காடாக காட்சியளித்தது.

இந்நிலையில், கிருஷ்ணகிரியில் பிரமாண்டமாக காட்சியளிக்கும் சையத் பாஷா மலைமீது உள்ள பெரிய பாறை ஒன்று உருண்டு விழுந்ததில் வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான வீட்டின் சுற்றுசுவர் இடிந்தது. வீட்டின் சுற்றுச்சுவர் மீது பெரிய பாறை உருண்டு விழுந்ததில் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்து இருக்கிறார்கள். தகவலறிந்து வந்த வட்டாட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பாறை உருண்டு விழுந்ததில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும் மலையின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

The post கிருஷ்ணகிரியில் தொடர் மழையால் பெரிய பாறை உருண்டு விழுந்தது: சையத் பாஷா மலையின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article