சென்னை: தேமுதிக தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
மா விளைச்சல் செய்யும் விவசாயிகளுக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. தமிழக அரசை கண்டித்து வரும் 30ம் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக அனைத்து அணிகளின் நிர்வாகிகளும், விவசாயிகளும், கூலி தொழிலாளர்களும், பொதுமக்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு வெற்றியடைய செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post கிருஷ்ணகிரியில் 30ம் தேதி தேமுதிக ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.