கிருஷ்ணகிரி: நிலப்பிரச்சினையை சரிசெய்ய ரூ. 4 ஆயிரம் லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ. கைது

5 hours ago 2

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வருவாய் வட்டாச்சியர் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதில் வீரணகுப்பம் கிராமத்தை சேர்ந்த வடிவேல் என்பவர் நிலப்பிரச்சினை தொடர்பாக மனு அளித்துள்ளார். இதையடுத்து நிலப்பிரச்சினையை சரிசெய்ய ரூ. 4 ஆயிரம் லஞ்சம் தரும்படி அதேகிராமத்தை சேர்ந்த வி.ஏ.ஓ. அகத்தூயவன் கேட்டுள்ளார்.

இது குறித்து கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு துறையில் வடிவேல் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வடிவேலுவிடம் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து அந்த ரூபாய் நோட்டுகளை வடிவேல் வி.ஏ.ஓ. அகத்தூயவனிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜன் தலைமையிலான போலீசார் வி.ஏ.ஓ. அகத்தூயவனை கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து வி.ஏ.ஓ. கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Read Entire Article