
புதுடெல்லி,
பகல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடை தற்போது ஜூன் 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த தடை இன்றுடன் முடிவடையும் நிலையில் தற்போது தடையை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
பாகிஸ்தான் ராணுவ விமானங்களுக்கும் இந்த தடை பொருந்தும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானங்கள் தங்கள் நாட்டு வான்பரப்பை பயன்படுத்த ஜூன் 24 ஆம் தேதி வரை தடை விதிப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.