கிருஷ்ணகிரி: கொடிக்கம்பத்தை அகற்றும்போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழப்பு - 4 பேர் படுகாயம்

1 day ago 2

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மூன்றம்பட்டி பகுதியில், பொது இடத்தில் இருந்த கொடிக்கம்பத்தை அகற்றும் பணியில் 5 பேர் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கொடிக்கம்பம் கொடிக்கம்பம் மின்சார வயரில் உரசியதால் 5 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 5 பேரையும் அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு, சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமமூர்த்தி என்ற நபர் உயிரிழந்தார். மற்ற 4 பேருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article