'கிரிஷ் 4' - ஹிருத்திக் ரோஷனுடன் மீண்டும் இணையும் பிரீத்தி ஜிந்தா?

1 week ago 4

மும்பை,

பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன். இவர் நடிப்பில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹீரோ படம் கிரிஷ். இப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றநிலையில் இதன் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகின. அதன்படி, கடைசியாக இதன் 3-ம் பாகம் கடந்த 2013-ம் ஆண்டு வெளியானது.

கிரிஷ் 3 வெளியாகி 10 வருடங்கள் கடந்த நிலையில் ரசிகர்கள் கிரிஷ்4 படம் எப்போது உருவாகும் என கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர். இதற்கிடையில், கிரிஷ் 4 படத்தை ஹிருத்திக் ரோஷன் நடித்து இயக்க திட்டமிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை நடிகராக கலக்கி வந்த ஹிருத்திக் ரோஷன், தற்போது கிரிஷ் 4 படம் மூலம் இயக்குனராக களமிறங்கி உள்ளதால் அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இப்படத்தின் முந்தைய பாகங்களில் நடித்த பிரீத்தி ஜிந்தா இதிலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

Read Entire Article