கிரிக்கெட் வீரராக ஆகவில்லை என்றால் 'கேங்ஸ்டர்' ஆகியிருப்பேன் - பாக். வீரர் ஓபன் டாக்

8 hours ago 3

கராச்சி,

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சஜித் கான் (வயது 31). இவர் பாகிஸ்தான் தேசிய அணிக்காக 12 டெஸ்ட் போட்டிகளில் ஆடி உள்ளார். சுழற்பந்து வீச்சாளரான சஜித் கான் இதுவரை 59 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தி உள்ளார்.

இந்நிலையில், சஜித் கான் பாகிஸ்தான் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நெறியாளர் கேள்வி ஒன்றை எழுப்பினார். அதில், நீங்கள் கிரிக்கெட் வீரராக ஆகவில்லை என்றால் என்னவாக இருந்திருப்பீர்கள் என கேட்டார்.

இதற்கு பதில் அளித்த சஜித் கான், 'கிரிக்கெட் வீரராக ஆகவில்லை என்றால் 'கேங்ஸ்டர்' ஆகியிருப்பேன்' என பதில் அளித்தார். இந்தக் கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகி உள்ளது.

Read Entire Article