கிரிக்கெட் இல்லாமல் நாம் அனைவரும்... - இளம் வீரர்களுக்கு சச்சின் அட்வைஸ்

3 hours ago 1

மும்பை,

இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் சிறந்த இந்திய வீரர், வீராங்கனைக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இதன்படி 2024-ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா மும்பையில் நேற்று இரவு நடந்தது. இதில் வாழ்நாள் சாதனையாளருக்கான சி.கே.நாயுடு விருது இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கருக்கு வழங்கப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் பேசிய சச்சின் தற்போதைய இளம் வீரர்களுக்கு கொடுத்த அறிவுரை பின்வருமாறு:-. "கிரிக்கெட் இல்லாமல் நாம் அனைவரும் இங்கே உட்கார்ந்து இருக்க மாட்டோம். அதனால் அதுவே என்னுடைய வாழ்க்கையின் மிகப்பெரிய பரிசு. உங்களிடம் இருக்கும் பேட் பந்தை நீங்கள் திடமாக பிடிக்கவில்லையெனில் உங்களுடைய கெரியரை மெதுவாக இழக்க ஆரம்பிப்பீர்கள். அதற்காக கவனத்துடன் இருங்கள் என்று நான் சொல்ல மாட்டேன். நமது வாழ்வில் சில கவன சிதறல்கள் இருக்கும்.


ஆனால் அது உங்களுடைய கெரியரை பாதிக்க விடாதீர்கள். அது நாம் அவற்றை எவ்வாறு கையாள்கிறோம் என்பதை பொறுத்தது. நம்மிடம் உள்ள அனைத்தையும் மதித்து, உங்கள் விளையாட்டை கவனித்துக் கொள்ளுங்கள். நாங்கள் அனைவரும் சமாளித்துவிட்டோம். எங்களிடம் எதுவும் இல்லை. நம்மிடம் எல்லாம் இருக்கும்போது அதை மதிப்பது முக்கியம். மேலும் விளையாட்டை எடுத்துச் செல்லவும், நாட்டின் பெயரை முன்னோக்கி கொண்டு செல்லவும் பொருத்தமான முறையில் நடந்துகொள்வது முக்கியம்.

நான் சொன்னது போல், நீங்கள் அனைவரும் தற்போதைய கிரிக்கெட் வீரர்கள். உங்களிடம் நிறைய கிரிக்கெட் மீதமுள்ளது. வெளியே சென்று, உங்கள் சிறந்ததைக் கொடுங்கள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் நீங்கள் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தியவுடன், சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கிருந்தீர்கள் என்பதை உணருவீர்கள்" என்று கூறினார்.

Read Entire Article