பெரம்பலூர் : பாண்டகப் பாடி கிராமத்தில் பட்டுப் பூச்சி வளர்ப்பு, மல்பெரி சாகுபடி குறித்து ரோவர் வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் பணி அனுபவம் பெற்றனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, வாலிகண்டபுரம் அருகே வல்லாபுரத்தில் அமைந்துள்ள தந்தை ரோவர் வேளாண் கல்லூரியின் இறுதியாண்டு மாணவிகளான இனியா, ஜான்சி, காயத்ரி, கவிநயா, இனிகா, காவியா, இர்பானா பாதிமா, கீர்த்தனா, ஜனனி பாரதி, கீர்த்தனா ஆகியோர் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் இறுதியாண்டு மாணவிகளின் வேளாண்மை பணி அனுபவம் நிகழ்ச்சியில், வேப்பந்தட்டை அருகிலுள்ள பாண்டகப்பாடி கிராமத்தில் பட்டுப்பூச்சி வளர்ப்பு குறித்தும் மற்றும் மல்பெரி சாகுபடி மற்றும் அவற்றின் செலவு குறித்தும், அவற்றை விற்பனை செய்யும் முறை குறித்தும் விளக்கமாகத் தெரிந்து கொண்டனர்.
அப்போது பட்டுப்புழு வளர்ப்பின் நிலைகள், கண்டறியப்படும் நோய் அதை சரி செய்யும் முறைகளை பெரம்பலூர் மாவட்ட பட்டு வளர்ச்சித்துறை உதவி ஆய்வாளர் மணிகண்டன் மூலம் மல்பெரி சாகுபடி வயலுக்கே சென்று கேட்டும் பார்த்தும் மாணவிகள் தெரிந்து கொண்டனர்.
The post கிராம தங்கல் திட்டத்தின் கீழ் வேளாண் கல்லூரி மாணவிகள் பெற்ற பணி அனுபவம் appeared first on Dinakaran.