சிவகங்கை, பிப். 15: சிவகங்கையில் கிராம உதவியாளரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார். மேலவாணியங்குடி குரூப் கிராம உதவியாளராக பணிபுரிபவர் கார்த்திகைராஜா(48). இவரிடம் சிவகங்கை அருகே சாமியார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரபாண்டி (45), இவரது மகன் அழகுபாரதி (21) ஆகிய இருவரும் சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் நேற்று முன்தினம் மற்றொருவர் நிலத்திற்கு அடங்கல் கேட்டு தகராறு செய்தனர். பின்னர் கார்த்திகைராஜா, மற்றும் மற்றொரு கிராம உதவியாளரான கொண்டையப்பனையும் தாக்கினர். இது குறித்த புகாரின் பேரில் சிவகங்கை நகர் போலீசார் வழக்கு பதிந்து சுந்தரபாண்டியை கைது செய்தனர். அழகுபாரதியை தேடி வருகின்றனர்.
The post கிராம உதவியாளரை தாக்கியவர் கைது appeared first on Dinakaran.