‘கிரண் பேடியைப் போலவே புதுச்சேரியின் தற்போதைய ஆளுநர் செயல்டுகிறார்’ - நாராயணசாமி

1 week ago 3

புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தனி அரசாங்கம் நடத்தி முதல்வர் ரங்கசாமிக்கு தெரியாமல் உத்தரவிடுவது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அரசு அதிகாரிகள் கூட்டம் நடத்தி தனிப்பட்ட உத்தரவுகளை பிறப்பிக்க அதிகாரம் இல்லை. அரசு நிர்வாகத்தை தனது கையில் எடுத்து அதிகாரிகளுக்கு ஆளுநர் உத்தரவு பிறப்பிக்கிறார். யார் ஆட்சியில் இருந்தாலும் மக்களால் தேர்வான முதல்வர், அமைச்சர்கள் பரிந்துரைகளைதான் ஆளுநர் ஏற்க வேண்டும். கருத்து வேறுபாடு ஏற்பட்டால் மத்திய அரசுக்கு அனுப்பலாம்.

Read Entire Article