கிரகாம் ஸ்டெயின்ஸ் கொலை வழக்கு; 25 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளி விடுதலை

1 day ago 2

புவனேஸ்வர்,

கடந்த 1999-ம் ஆண்டு ஜனவரி 21-ந்தேதி, ஒடிசா மாநிலம் கியோன்ஜர் மாவட்டத்தில் உள்ள மனோகர்பூர் கிராமத்தில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர் கிரகாம் ஸ்டெயின்ஸ்(58), அவரது மகன்கள் பிலிப்(10) மற்றும் டிமோதி(6) ஆகிய 3 பேரை ஒரு கும்பல் உயிருடன் எரித்து கொலை செய்தது.

இந்த கொடூரமான கொலை சம்பவம் இந்தியா மட்டுமின்றி, சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக மகேந்திர ஹெம்பிராம், தாரா சிங் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் முக்கிய குற்றவாளி தாரா சிங்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

மற்றொரு குற்றவாளி மகேந்திர ஹெம்பிராம் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், 25 ஆண்டுகளுக்கு பிறகு நன்னடத்தை அடிப்படையில் மகேந்திர ஹெம்பிராம் தற்போது சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சிறையில் ஹெம்பிராம் செய்த பணிகளுக்கான ஊதியத்தை சிறை நிர்வாகம் அவரிடம் வழங்கியது. தற்போது 50 வயதாகும் மகேந்திர ஹெம்பிராம், சிறையில் இருந்து விடுதலையான பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, "மதமாற்றம் தொடர்பான ஒரு சம்பவத்தில் பொய்யாக சிக்க வைக்கப்பட்டு 25 ஆண்டுகள் சிறையில் கழித்தேன். இன்று நான் விடுதலை செய்யப்பட்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.

Read Entire Article