கியூபா நாட்டின் மிகப்பெரிய மின் நிலையம் முடங்கியது: நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு மின்சாரம் துண்டிப்பு

4 months ago 14
கியூபா நாட்டின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையம் முடங்கியதால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் கடைகள் மூடப்பட்டு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள கியூபா அரசு டீசல் இறக்குமதியை குறைத்துக்கொண்டதால், அங்குள்ள மின் நிலையங்களை இயக்க முடியாத சூழல் எற்பட்டுள்ளது. இதனால் கடந்த 2 மாதங்களாக அடிக்கடி நாடு முழுவதும் மின் வெட்டுகள் ஏற்பட்டுவருகின்றன. அண்மையில் அடுத்தடுத்து தாக்கிய புயல்களால் பாதிக்கப்பட்டிருந்த கியூபா மக்கள், இத்தகைய மின் வெட்டுகளால் மேலும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
Read Entire Article