சென்னை: அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கை: கிண்டியில் உள்ள அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-25ம் கல்வி ஆண்டிற்கான காலியிடத்திற்கான நேரடி சேர்க்கையானது துவங்கியுள்ளது. எனவே 8ம் வகுப்பு தோச்சி பெற்றவர்கள், 10ம் வகுப்பு தேர்ச்சி / தோல்வியற்றவர்கள் மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி / தோல்வியுற்றவர்கள் ஓர் ஆண்டு/2 ஆண்டு தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெறலாம்.
பயிற்சியின் போது விலையில்லா மிதிவண்டி, பாடப்புத்தகம், சீருடை, காலணி, இலவச பேருந்து,ரயில் பயணச் சலுகை, மாதாந்திர உதவித் தொகை ரூ.750, தகுதியுள்ள மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உதவித்தொகை ரூ.1000, இலவச அடையாள அட்டை ஆகிய சலுகைகள் அரசால் வழங்கப்படுகிறது. நேரடி சேர்க்கை 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post கிண்டி அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை appeared first on Dinakaran.