சென்னை: ஈரோடு ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டதற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் உத்தரவின்பேரில், கழக மாவட்டத்துக்கு உட்பட்ட ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் ஆகிய அமைப்புகளுக்கு இளைஞர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்களை நியமித்து வருகிறோம். தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற நேர்காணலில் கலந்துகொண்டோரிடம் இருந்து பெறப்பட்ட தரவுகள், உரிய பரிந்துரைகள்,
தற்போதைய நிர்வாகிகளின் செயல்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தலைமைக் கழகத்தின் ஒப்புதலுடன் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுவரை 23 கழக மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஈரோடு வடக்கு, ஈரோடு தெற்கு, ஈரோடு மத்திய மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர்களுக்கு இளைஞர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் அனைவருக்கும் என் அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்தார்.
The post ஈரோடு ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமனம்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.