"கிங்ஸ்டன் 2" அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்!

3 hours ago 2

சென்னை,

இயக்குனர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியுள்ள படம் 'கிங்ஸ்டன்'.இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி இணைந்து நடித்துள்ளனர். இது ஜி.வி. பிரகாஷ் தயாரிக்கும் முதல் படம். இப்படத்தை பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளன.

இந்த படத்தில் சேத்தன், அழகம் பெருமாள், இளங்கோ குமரவேல் என பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படமானது இந்தியாவின் முதல் கடல் பேய் படமாகும். எனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இப்படம் நாளை வெளியாக உள்ளது.

இந்நிலையில் 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் 2ம் பாக பணிகளை இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் தொடங்கி விடுவோம் என்று ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார்.

#Kingston from tomm in theatres . My first film as producer need All ur support and wishes ❤️✨. Bookings are on pic.twitter.com/2AOXSNOHWu

— G.V.Prakash Kumar (@gvprakash) March 6, 2025
Read Entire Article