
வாஷிங்டன்,
காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க பரிந்துரையில் போர் நிறுத்தம் செய்யப்பட்டதற்கு நன்றி எனவும் கூறியுள்ள டிரம்ப், இந்தியா மற்றும் பாகிஸ்தானின் சக்தி வாய்ந்த தலைமைகளை நினைத்து பெருமைப்படுகிறேன் எனவும் கூறியுள்ளார். மேலும்,இந்தியா, பாகிஸ்தானுடன் வர்த்தகத்தை கணிசமாக அதிகரிக்கப் போவதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.