
ஸ்ரீநகர்,
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பாதுகாப்புப்படை வீரர் விஜய் குமார். இவர் ஜம்மு-காஷ்மீரின் ரம்பன் மாவட்டம் தர்முந்த் ராணுவ மருத்துவமனை முகாமில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், முகாமில் இன்று அதிகாலை 3.40 மணியளவில் விஜய் குமார் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். துப்பாக்கி சூடு சத்தம் கேட்டு விரைந்து வந்த சக பாதுகாப்புப்படை வீரர்கள் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த விஜய் குமாரின் உடலை மீட்டு ரம்பன் மாவட்ட மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்துகொண்ட விஜய் குமார் 2 மாத விடுமுறைக்குப்பின் கடந்த 28ம் தேதிதான் பணியில் சேர்ந்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.