காஷ்மீர் தாக்குதலின்போது ஆண்களை வேட்டையாடிய பயங்கரவாதிகள்

5 hours ago 1

மும்பை,

காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் ஆண்கள் ஆவர். அவர்களுடன் சுற்றுலா சென்றிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை பயங்கரவாதிகள் எதுவும் செய்யாமல் விட்டுவிட்டனர். பயங்கரவாதிகளின் துப்பாக்கிகளுக்கு இரையானவர்களில் மராட்டிய மாநிலம் புனேயை சேர்ந்த சந்தோஷ் ஜக்தலேவும் (வயது 54) ஒருவர். சம்பவம் குறித்து அவரது மகள் அசாவரி ஜக்தலே (26) கண்ணீருடன் கூறியதாவது:-

நான், எனது பெற்றோர் உள்பட 5 பேர் ஒரு குழுவாக சுற்றுலா சென்றிருந்தோம். பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதும் அருகில் இருந்த கூடாரம் ஒன்றில் சென்று பதுங்கிக்கொண்டோம். துப்பாக்கிச்சூட்டில் தப்புவதற்காக தரையில் படுத்துக்கொண்டோம். அப்போது அந்த பயங்கரவாதிகள் முதலில் பக்கத்து கூடாரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பின்னர் எங்கள் கூடாரம் அருகே வந்தனர்.

பின்னர் எனது தந்தை மற்றும் மாமாவை வெளியே அழைத்தனர். முதலில் எனது தந்தையின் தலை, காது பின்புறம் மற்றும் முதுகில் துப்பாக்கியால் சுட்டனர். எனது மாமா மீதும் 4 முதல் 5 முறை துப்பாக்கியால் சுட்டனர்.இப்படி ஆண்களை மட்டுமே குறிவைத்து சுட்டனர். பெண்களாகிய எங்களை எதுவும் செய்யவில்லை. சம்பவத்தை தொடர்ந்து உள்ளூர் மக்கள் எங்களை அருகில் உள்ள பஹல்காம் கிளப்புக்கு அனுப்பி வைத்தனர். என் தந்தை மற்றும் மாமாவின் நிலை குறித்து தெரியவில்லை.

இவ்வாறு இளம்பெண் அசாவரி ஜக்தலே பதற்றத்துடன் தெரிவித்தார்.

Read Entire Article