
மும்பை,
'கல்கி 2898 ஏடி' படத்தின் மாபெரும் வெற்றியைத்தொடர்ந்து, இயக்குனர் நாக் அஸ்வின் அதன் 2-ம் பாகத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதன் படப்பிடிப்பு 60 சதவிகிதம் முடிந்துள்ளநிலையில், மீதி படப்பிடிப்பு துவங்க தாமதமாகும் என்று தெரிகிறது.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நாக் அஸ்வினிடம் 'கல்கி 2' எப்போது? என கேட்கப்பட்டது. அதற்கு அவர், "கடந்த முறை, 3-4 கிரகங்கள் இணையும்போது 'கல்கி 2898 ஏடி' வெளியாகும் என்று நான் சொன்னேன். இப்போது, 7-8 கிரகங்கள் இணையும்போது அதன் 2-ம் பாகம் வெளியாகும்' என்றார்.
அவரது நகைச்சுவையான பதில் அங்கிருந்தவர்களை சிரிக்க வைத்தது. இதற்கிடையில், நாக் அஸ்வின் ஆலியா பட்டுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன.