காஷ்மீர் சம்பவம் எதிரொலி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

4 hours ago 1

திருமலை,

காஷ்மீர் சம்பவம் எதிரொலியால், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்புப்போடப்பட்டுள்ளது. தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவம் எதிரொலியால், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. அலிபிரி சோதனைச் சாவடி, 2 மலைப்பாதைகள், ஜி.என்.சி. டோல்கேட் உள்பட பல்வேறு பகுதிகளில் தேவஸ்தானத்தின் பாதுகாப்பு மற்றும் பறக்கும்படையினரும், போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருமலைக்கு வரும் சந்தேகத்துக்கு இடமான வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. திருப்பதியில் இருந்து திருமலைக்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள், அவைகளில் கொண்டு வரப்படும் ெபாருட்கள் தீவிர சோதனை செய்யப்படுகின்றன. அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.கோவில் வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவில் எதிரே ஆக்டோபஸ் படை வீரர்கள் 24 பணி நேரமும் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதவிர அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு நடைபாதைகளில் போலீசாரும், தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திருமலைக்கு நடந்து வரும் பக்தர்களின் பொருட்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது திருமலையில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதாலும், காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்ததாலும் திருமலையில் உச்சக்கட்ட உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் சோதனைக்கு பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும், என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read Entire Article