
ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிக்கின்றனர் என்பது பற்றிய ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதனை தொடர்ந்து, இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீசார் இணைந்து குப்வாரா மாவட்டத்தின் குகல்தார் பகுதியில் கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில், சந்தேகத்திற்குரிய வகையில் சிலரின் செயல்பாடுகள் இருப்பது தெரிய வந்ததும் பாதுகாப்பு படையினர் உடனடியாக உஷார்படுத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து, படையினருக்கும், பதுங்கி இருந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.
இந்த மோதலில், 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.