காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெறும் தேதி அறிவிப்பு

2 months ago 14

புதுடெல்லி,

காவிரி நீர் வினியோகத்தில் பிரச்சினைகளை களைவதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் இதுவரை 34 கூட்டங்களை நடத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து 35-வது கூட்டத்தை அடுத்த மாதம் (நவம்பர்) 6-ந் தேதி நடத்துவதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு டெல்லியில் இந்த கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. 

Read Entire Article