காவிரி டெல்டா பகுதிகளில் மட்டும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சாலைகள் அமைக்க நடவடிக்கை: அமைச்சர் எ.வ.வேலு

2 weeks ago 5

சென்னை:“காவிரி டெல்டா பகுதிகளில் மட்டும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக” சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ சிந்தனைச்செல்வன், “நீர் பாசனம் அதிகமுள்ள நெல் வயல்கள் நிறைந்த சாலைகள், காட்டுமன்னார்கோவில் போன்ற டெல்டா பகுதிகளில் அதிகமாக உள்ளன. இப்பகுதிகளில் சாலைகள் மாநில அளவிலான பொது தரத்தில் அமைக்கப்படுகிறது. இதனால் அந்த சாலைகளின் ஓரம் சேறும், சகதியுமாக உள்ளன. எனவே டெல்டா பகுதிகளுக்கு கூடுதல் தரத்திலான சாலைகள் அமைக்கப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

Read Entire Article