காவி அரசியல் செய்யும் கவர்னரை திரும்ப பெறுங்கள்: ஒன்றிய அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

2 months ago 11

திருமங்கலம்: காவி அரசியல் செய்யும் கவர்னரை, ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டுமென கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். மதுரை மாவட்டம், திருமங்கலத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாவட்ட மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி: பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் பூசாரி சந்தேகமான முறையில் உயிரிழந்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்சின் தம்பி ஓ.ராஜா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது மிகுந்த குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் அரசு தரப்பில் மேல் முறையீடு செய்யவேண்டும்.

நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக கவர்னர் வழக்கம் போலவே செயல்படுகிறார். அவர் திருந்தமாட்டார். கவர்னர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் திருவள்ளுவர் படத்திற்கு காவி உடை அணிவித்திருப்பது மோசமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளுவர், கபீர்தாசர், அபிநயா ஆகியோரில், வள்ளுவருக்கு மட்டும் காவி உடை அணிவித்திருப்பது ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தினை கேவலப்படுத்தும் வகையில் உள்ளது. கவர்னரின் பதவி காலம் முடிந்த பின்பும் புறப்பட்டுச்செல்ல மறுக்கிறார். காவி அரசியல் செய்து வரும் அவரை, உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும். தமிழகத்தில் திமுக கூட்டணியில் தொடர்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post காவி அரசியல் செய்யும் கவர்னரை திரும்ப பெறுங்கள்: ஒன்றிய அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article