காவாசாக்கி நிறுவனம், மேம்படுத்தப்பட்ட புதிய நிஞ்சா 500 என்ற மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. சூப்பர் ஸ்போர்ட் மோட்டார் சைக்கிள் ஸ்டைலில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பைக்கில் 451 சிசி லிக்விட் கூல்டு பேரரல் டிவின் மோட்டார் இடம் பெற்றுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 45பிஎஸ் பவரையும் , 42.6 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தக் கூடியது. இதற்கு முன்பு சந்தையில் இருந்த நிஞ்சா 400 பைக் உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிஞ்சா 500 அதை விட 5 என்எம் டார்க்கை அதிகமாக வெளிப்படுத்தும்.
இதில் எல்இடி ஹெட்லைட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இன்டிகேட்டர்களில் ஹாலோஜன் விளக்குகள் இடம் பெற்றுள்ளன. இந்தப் பிரிவில் காவாசாக்கி நிஞ்சா 500 மிகவும் விலை உயர்ந்த பைக்காக கருதப்படுகிறது. இதன் ஷோரூம் விலை சுமார் ₹5.29 லட்சம். இது முந்தைய மாடலை விட சுமார் ₹5,000 அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
The post காவாசாக்கி நிஞ்சா 500 appeared first on Dinakaran.