காவாசாக்கி இசட்900

1 month ago 4

காவாசாக்கி நிறுவனம் இசட்900 என்ற மேம்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை கடந்த ஆண்டு சர்வதேச அளவில் சந்தைப்படுத்தியது. ஆனாலும், இந்தியச் சந்தையில் இந்த மோட்டார் சைக்கிள் எப்போது வரும் என்ற விவரம் வெளியாகவில்லை. இந்நிலையில், இந்த பைக்கிற்கான காப்புரிமையை இந்தியாவில் இந்நிறுவனம் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்தியச் சந்தையில் இந்த பைக் விற்பனைக்கு வர உள்ளது உறுதியாகியிருக்கிறது. 2025ம் ஆண்டுக்கான மேம்படுத்தப்பட்ட இந்த மோட்டார் சைக்கிளில், 948 சிசி இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 9,500 ஆர்பிஎம்-ல் 123 எச்பி பவரையும், 7,700 ஆர்பிம்-ல் 97.4 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

ஏற்கனவே இருந்த இன்ஜின் திறனுடன் ஒப்பிடுகையில் இது 2 எச்பி பவர், 1 என்எம் டார்க் குறைவு. பிரேக்கிங் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. ரைடு பை வயர், 3 லெவல் டிராக்ஷன் கண்ட்ரோல், 2 பவர் மோட்கள், குரூஸ் கண்ட்ரோல், டூயல் சானல் ஏபிஎஸ், இரு புறமும் இயங்கும் குயிக் ஷிப்டர், 5 அங்குல டிஎப்டி டிஸ்பிளே, புளூடூத் இணைப்பு வசதி உட்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில் ஆர்எஸ் -க்கு நேரடி போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தியச் சந்தையில் உள்ள இசட்900 பைக் ஷோரூம் விலை சுமார் ரூ.9.38 லட்சம்.

The post காவாசாக்கி இசட்900 appeared first on Dinakaran.

Read Entire Article