காவல்துறையின் ஈரல் மட்டுமல்ல, இதயமும் கெட்டுவிட்டது: மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேச்சு

2 hours ago 4

திருப்புவனம்: முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியதைப்போல் காவல்துறையின் ஈரல் மட்டுமல்ல, தற்போது இதயமும் கெட்டுவிட்டது என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் திருப்புவனத்தில் பேசினார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தனிப்படை போலீஸாரால் கொலை செய்யப்பட்ட மடப்புரம் காளி கோயில் ஒப்பந்த காவலாளி அஜித்குமாரின் படுகொலைக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்டச் செயலாளர் ஏ. ஆர். மோகன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.அர்ச்சுணன், என்.பாண்டி, எஸ்.கே. பொன்னுத்தாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Read Entire Article