அசாம் முதல்வரால் விமர்சனம் செய்யப்பட்ட தனியார் பல்கலை. வேந்தர் கைது: பாஜ அரசு நடவடிக்கை

7 hours ago 2

கவுகாத்தி: மேகாலயாவில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தனியார் பல்கலைக்கழகத்தின் வேந்தர் மஹ்பாபுல் ஹக். இவருக்கு சொந்தமான அறக்கட்டளை சார்பில் அசாம் மாநிலம் ஸ்ரீபூமி மாவட்டத்தில் பதர்கண்டியில் சிபிஎஸ்இ பள்ளி நடத்தப்படுகிறது. இங்கு, சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர்கள் எழுதி வந்தனர். 274 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 214 பேர் தனியார் பல்கலைக்கழகத்தின் சிறப்பு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற மாணவர்கள்.

இவர்களிடம் தேர்வின் போது, சரியான விடைகள் எழுத உதவி செய்வதாகவும் அதன் மூலம் அதிக மதிப்பெண் பெறலாம் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தேர்வு கண்காணிப்பாளர்கள் இதற்கு சம்மதிக்க மறுத்ததால் மாணவர்களுக்கு உதவ முடியாமல் போனது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் போராட்டம் நடத்தியதன் மூலம் சில சட்டம் ஒழுங்கு பிரச்னை வெடித்தது. இதுதொடர்பாக ஸ்ரீபூமி போலீசில் புகார்கள் தரப்பட்டன.

இந்த புகார் அடிப்படையில், பல்கலைக்கழக வேந்தர் மஹ்பாபுல் ஹக் நேற்று அதிகாலை கவுகாத்தியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேகாலயா பல்கலைக்கழகம் கவுகாத்திக்கு ஒட்டிய மலையில் அமைந்துள்ளதால் கவுகாத்தியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகவும் அதை வெள்ள ஜிகாத் என்றும் வேந்தர் ஹக்குக்கு எதிராக அசாம் முதல்வர் பேசி உள்ளார். கைது செய்யப்பட்ட வேந்தரை இவ்வாறு முதல்வர் அடிக்கடி விமர்சனம் செய்வது குறிப்பிடத்தக்கது.

The post அசாம் முதல்வரால் விமர்சனம் செய்யப்பட்ட தனியார் பல்கலை. வேந்தர் கைது: பாஜ அரசு நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article