
சென்னை,
1959-ம் ஆண்டு அக்.21-ம் தேதி லடாக்கில் சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அக்.21-ம் தேதி காவலர் வீர வணக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது
இந்நிலையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில், "நாட்டின் எல்லையை ராணுவ வீரர்கள் பாதுகாப்பது போல், நமது வீடுகளைப் பாதுகாப்பவர்கள் காவல்துறையினர்.
தங்கள் உயிரையும் துச்சமென நினைத்துக் கடமையாற்றும்போது உயிர்த்தியாகம் செய்தோர் பலர். அந்த மாவீரர்களையும் அவர்களது தியாகத்தையும் போற்றி காவலர் வீரவணக்க நாளில் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன்" என்று அதில் பதிவிட்டுள்ளார்.