சிவகங்கை, மார்ச் 10: காளையார்கோவில் அருகே கொல்லங்குடி அரியாகுறிச்சி வெட்டுடையார் காளியம்மன் கோவிலில் பங்குனி சுவாதி திருவிழா நேற்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. காளையார்கோவில் அருகே கொல்லங்குடி அறியாகுறிச்சியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான வெட்டுடையார் காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் சுவாதி திருவிழா நடைபெறும்.
இந்த ஆண்டு நேற்று காலை 9மணி முதல் 10மணிக்குள் கொடியேற்றம் மற்றும் இரவு காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. மார்ச் 16ம் தேதி 8ம் திருநாள் இரவு தங்கக்குதிரை வாகனம், மார்ச் 17ம் தேதி 9ம் திருநாள் காலை 9மணி முதல் 10மணிக்குள் தேரோட்டம், மார்ச் 18ம் தேதி 10ம் திருநாள் இரவு பூப்பல்லக்கு ஆகிய முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை அறநிலையத்துறை அலுவலர்கள், அறங்காவலர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
The post காளியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா துவக்கம் appeared first on Dinakaran.