கால்நடை மருத்துவ பேராசிரியரின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்தது சரிதான்: உயர் நீதிமன்றம் உத்தரவு

6 hours ago 2

சென்னை: குடும்பப் பிரச்னை தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பேராசிரியரின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு சரியானதே என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பேராசிரியராக பணியாற்றி வந்த திருநாவுக்கரசு, 2023 ஏப். 30-ம் தேதி பணி ஓய்வு பெறவிருந்தார். அவரது மருமகள் அளித்த வரதட்சணைக் கொடுமை புகாரின் பேரில் பேராசிரியர் திருநாவுக்கரசு, அவரது மகன் உள்ளிட்டோருக்கு எதிராக செம்பியம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

Read Entire Article