கால் நூற்றாண்டு காலம் தி.மு.க.வை தோளில் சுமக்கவுள்ளார் உதயநிதி - அமைச்சர் சேகர்பாபு

3 months ago 29

சென்னை,

அமைச்சராக இருந்துவரும் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. அவர் இன்று மாலை பதவியேற்க உள்ளார். அவருக்கு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள், அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராவது குறித்து அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து இருப்பதாவது;

"அடுத்த கால் நூற்றாண்டு காலம் திமுகவையும், மக்கள் நலனையும் உதயநிதி ஸ்டாலின் தோளில் சுமக்கவுள்ளார். மக்களிடம் செல்லாக்காசாகிவிட்ட பாஜகவின் கூற்றுக்கு செவிசாய்க்க விரும்பவில்லை. தகுதியில்லாத கட்சி என்பதாலேயே பாஜகவிற்கு மக்கள் தோல்வியை பரிசளித்துள்ளனர்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Read Entire Article