காலை இழந்த நடிகர்... அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்

1 week ago 5

சென்னை,

பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருப்பவர் சிரிக்கோ உதயா. இவர் நடிகர் சந்தானம் திரைப்படங்களுக்கு காமெடி வசனமும் எழுதி இருக்கிறார். அவ்வாறு இவர் எழுதிய வசனங்கள் இன்றும் பிரபலமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.

சிரிக்கோ உதயா நடிகர் மட்டுமில்லாமல், சிறந்த வயலின் கலைஞரும் கூட. இவர் பல பாடலுக்கு வயலின் வாசித்துள்ளார். இந்நிலையில், உதயா, சக்கரை வியாதியால் காலை இழந்துள்ளார். இது தமிழ் திரையுலகினர் உள்பட பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அறுவை சிகிச்சை மூலம் கால் அகற்றப்பட்டுள்ள உதயா, உதவி வேண்டி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Read Entire Article