காலபைரவர் கோயிலில் காலாஷ்டமி பெருவிழா

2 months ago 10

தர்மபுரி, நவ.23: அதியமான்கோட்டை காலபைரவர் கோயிலில், இன்று (23ம் தேதி) காலாஷ்டமி பெருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று காலை 9 மணியளவில், கோயில் வளாகத்தில் கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. நிகழ்ச்சியில் தர்மபுரி தொகுதி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் தலைமையில், இந்துசமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் மகாவிஷ்ணு, செயல் அலுவலர் ஜீவானந்தம் முன்னிலையில் கொடியேற்றம் நடந்தது. இதையடுத்து காலபைரவர் தேர்பவனி நடந்தது. எம்எல்ஏ உள்ளிட்ட பிரமுகர்கள் தேர் இழுத்து வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post காலபைரவர் கோயிலில் காலாஷ்டமி பெருவிழா appeared first on Dinakaran.

Read Entire Article