காலனித்துவ ஆட்சிக்கு எதிராக வீரப் போராட்டத்தை நடத்தியவர் வேலு நாச்சியார் - பிரதமர் மோடி புகழஞ்சலி

6 months ago 16

புதுடெல்லி,

ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டுச் சொந்த மண்ணை மீட்டெடுத்து, விடுதலைப் போராட்டத்தில் நாட்டுக்கே முன்னோடியாகப் போர்க்களத்தில் தீரத்துடன் களமாடியவர் வீரமங்கை ராணி வேலு நாச்சியார் [1730 -1796]. அவரது 295-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் அவரது பிறந்த தினத்தை ஒட்டி அரசியல் தலைவர்கள் அவருக்கு வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ராணி வேலு நாச்சியாருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

துணிச்சல்மிக்க ராணி வேலு நாச்சியாரை அவரது பிறந்த தினத்தில் நினைவு கூர்கிறேன்! காலனித்துவ ஆட்சிக்கு எதிராக அவர் ஒரு வீரப் போராட்டத்தை நடத்தினார். இணையற்ற வீரத்தையும், திறமையையும் வெளிப்படுத்தினார். ஒடுக்குமுறைக்கு எதிராகவும், சுதந்திரத்திற்காகவும் போராட தலைமுறைகளை அவர் ஊக்குவித்தார். பெண்களுக்கு அதிகாரமளிப்பதை மேம்படுத்துவதில் அவரது பங்கு பரவலாகப் பாராட்டப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article