காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு டெல்லி முழுவதும் ஜனவரி 1ம் தேதி வரை அனைத்து வகையான பட்டாசுகளுக்கும் தடை: மாசு கட்டுப்பாட்டு குழு

3 months ago 10

டெல்லி: டெல்லி முழுவதும் ஜனவரி 1ம் தேதி வரை அனைத்து வகையான பட்டாசுகளுக்கும் மாசு கட்டுப்பாட்டு குழு தடை விதித்தது. வருகிற அக். 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு என தொடர்ந்து விழாக்கள் நடைபெற இருக்கின்றன. இதையொட்டி டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு, பட்டாசுகளை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ, பதுக்கி வைக்கவோ, வெடிக்கவோ முற்றிலும் தடை விதிக்கப்படுவதாக டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

உத்தரவின் படி, டெல்லியில் பட்டாசுகளை உற்பத்தி செய்தல், சேமித்தல் மற்றும் ஆன்லைன் மார்க்கெட்டிங் தளங்கள் மூலம் விநியோகம் செய்தல் மற்றும் அனைத்து வகையான பட்டாசுகளை வெடித்தல் உள்ளிட்ட அனைத்து வகையான பட்டாசுகளுக்கும் 01.01.2025 வரை முழுமையான தடை விதிக்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் நடைபெறும் பட்டாசு விற்பனைக்கும் இந்த தடை உத்தரவு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறை இந்த தடை உத்தரவைக் பின்பற்றி டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அறிக்கை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு டெல்லி முழுவதும் ஜனவரி 1ம் தேதி வரை அனைத்து வகையான பட்டாசுகளுக்கும் தடை: மாசு கட்டுப்பாட்டு குழு appeared first on Dinakaran.

Read Entire Article