விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் கோயில் சுவர் இடிந்து விழுந்ததில் 9 பக்தர்கள் உயிரிழந்தனர். சிம்மாச்சலம் அப்பன்னசாமி கோயிலில் சந்தனக்காப்பு அலங்காரம் காண வந்த பக்தர்கள் மீது சுவர் இடிந்து விழுந்தது. சுவர் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்த பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வாங்க காத்திருந்தவர்கள் மீது சுவர் இடிந்து விழுந்தது. நள்ளிரவில் சிம்மாச்சலத்தில் பலத்த மழை பெய்த நிலையில் சுவர் இடிந்து விழுந்து விபத்துகுள்ளானது.
The post விசாகப்பட்டினத்தில் கோயில் சுவர் இடிந்து விழுந்ததில் 9 பக்தர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.