காற்றாலை மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்த மின்னுற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை

1 week ago 4

சென்னை: “காற்றாலைகளில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தை, மின்வாரியம் முழு அளவில் பயன்படுத்த வேண்டும்” என, புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி தனியார் நிறுவனங்கள் 9,331 மெகாவாட் திறனில் காற்றாலை மின்நிலையங்களை அமைத்துள்ளன. இவற்றில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 60 சதவீதம் தங்களது சொந்த தேவைக்கு பயன்படுத்துவதோடு, எஞ்சிய 40 சதவீத மின்சாரம், மின்வாரியத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. சில நிறுவனங்கள் 2 ஆயிரம் மெகாவாட் திறனில் காற்றாலைகளை அமைத்து, பிற மாநிலங்களுக்கு செல்லும் மின்தொடரமைப்புக் கழகத்தின் மின்வழித் தடத்தில் இணைத்துள்ளன.

Read Entire Article